துபாய்: எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடான குவைத் நாட்டில் சர்வதேச விமர்சனங்களை மீறி, அரியவகையில் 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் ஆறாவது பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்ட குவைத்தில் மரணதண்டனைகள் மிகவும் அரிதானவை. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு, பாகிஸ்தானியர், சவூதி அரேபியா மற்றும் குடியுரிமை இல்லாதவர்களுக்காக அமீரகத்தில் பயன்படுத்தப்படும் “பிடூன்” என்ற பெயர் தூக்கிலிடப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது, ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக மரணதண்டனையை விமர்சித்தது, இது ஐரோப்பிய ஆணையத்தின் அதிகாரி மார்கரிடிஸ் ஷினாஸ் நாட்டிற்கு விஜயம் செய்ததை ஒட்டியதாகக் கூறியது.
அதைத்தொடர்ந்து,. குவைத் 2017 ஆம் ஆண்டு முதல் மரணதண்டனையை நிறைவேற்றாம்ல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், நேற்று ஒரே நேரத்தில்,குடும்ப உறுப்பினர் உட்பட ஏழு கைதிகளுக்கு வெகுஜன மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், ஏழு கைதிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து அரசுக்குச் சொந்தமான ‘குனா’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 போ மத்திய சிறைச் சாலையில் நேற்று (புதன்கிழமை) தூக்கிலிடப்பட்டனா். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா்களில் 3 குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் அடங்குவா் என தெரிவித்துள்ளது.
மனிதா்களின் மிகவும் புனிதமான உரிமையாகிய உயிா்வாழும் உரிமையை அவா்கள் பிறரிடமிருந்து பறித்ததால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசுத் தரப்பு நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மரண தண்டனை நிறைவேற்றத்து ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.