குலைநடுங்க வைக்கும் கொடூர சித்திரவதை… கரை ஒதுங்கிய மூன்று சடலங்கள்: அதிர்ச்சியில் மக்கள்


மெக்சிகோ மாகாணம் ஒன்றில் 24 மணி நேர இடைவெளியில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட மூன்று சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொடூரமாக சித்திரவதை

மெக்சிகோவின் குரேரோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரபலமான இரு கடற்கரையிலேயே குறித்த மூன்று சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளன.
சனிக்கிழமை மதிய நேரம் காண்டேசா கடற்கரை பகுதியில் இருந்து 911 இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.

குலைநடுங்க வைக்கும் கொடூர சித்திரவதை... கரை ஒதுங்கிய மூன்று சடலங்கள்: அதிர்ச்சியில் மக்கள் | Tortured Bodies Wash Ashore Horrified Tourists

@reuters

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் ஆண்கள் இருவரின் சடலங்களை கைப்பற்றியுள்ளனர்.
ஒருவரது சடலமானது சிமெண்டாலான நங்கூரத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது, இன்னொருவர் முகம் மண்ணில் புதைய கவிழ்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஞாயிறன்று பகல், ஒரு மைல் தொலைவில் உள்ள இகாகோஸ் கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்டு சடலத்தை கடலில் வீசியிருக்கலாம் என்றே பொலிசார் கூறுகின்றனர்.

மூன்று மாதத்தில் 213 படுகொலைகள்

கொடூரமாக சித்திரவதைக்கு இலக்கான மூன்று சடலங்களும் நவம்பர் 9ம் திகதி கடலில் மிதந்து காணப்பட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் பொலிசாரால் மீட்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

சடலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் பொதுமக்களை பொலிசார் மீண்டும் அனுமதித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
குரேரோ மாகாணத்தின் பிரபலமான Acapulco நகரில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 100,000 பேர்களுக்கு 110 படுகொலைகள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குலைநடுங்க வைக்கும் கொடூர சித்திரவதை... கரை ஒதுங்கிய மூன்று சடலங்கள்: அதிர்ச்சியில் மக்கள் | Tortured Bodies Wash Ashore Horrified Tourists

@reuters

மேலும், ஆண்டு பிறந்து முதல் மூன்று மாதத்தில் மட்டும் Acapulco நகரில் 213 படுகொலைகள் பதிவாகியிருந்தது.
ஆனால், 2021ல் மட்டும் மொத்தம் 442 பேர்கள் குறித்த நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மெக்சிகோ நாட்டில், ஆண்டு பிறந்து இந்த 9 மாதங்களில் 23,351 படுகொலைகள் பதிவாகியுள்ளது.
2021ல் 33,308 பேர்களும், 2020ல் 34,554 படுகொலைகளும், 2019ல் 34,690 படுகொலைகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.