சியோல்: வடகொரியா ‘அடையாளம் தெரியாத ஏவுகணையை’ ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அண்மையில் சில மாதங்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் ஐந்துக்கும் அதிகமான ஏவுகணை பரிசோதனைகள் நடத்திய வடகொரியா, இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதித்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
வடகொரியா கிழக்கு கடலை நோக்கி “அடையாளம் தெரியாத ஏவுகணையை” ஏவியது என்று தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 17, வியாழக்கிழமை) ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் கிம் சியுங்-கியூம் கூறினார், ஆனால் அது தொடர்பான வேறு எந்த கூடுதல் விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.
“வட கொரியா அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை கிழக்குக் கடலில் வீசுகிறது” என்று ஜெனரல் கிம் சியுங்-கியூம் கூறுவது ஜப்பான் கடல் என்றும் அழைக்கப்படும் நீர்நிலையைக் குறிப்பிடுகிறார் என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | அணு ஆயுதங்களை கைவிட மாட்டேன்: சூளுரைக்கும் கிம் ஜாங் உன்னின் அதிரடி ஏவுகணை
வடகொரியா தொடர்பான அமெரிக்க-தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாட்டின் உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் “கடுமையான” நடவடிக்கைகளை தொடங்குவதாக வடகொரியாவின் வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுய் (Choe Son Hue) தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை தாக்குதல் நடைபெற்றிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார், வட கொரியாவின் “சட்டவிரோதமான பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களால்” அச்சுறுத்தலுக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் பற்றி விவாதிக்க இந்த கலந்தாலோசனை நடைபெற்றதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இந்த கலந்தாலோசனை கூட்டத்திற்கு வடகொரியா வலுவான பதிலை தந்துள்ளது, “கொரிய தீபகற்பத்தில் நிலைமையை கணிக்க முடியாத கட்டத்திற்கு கொண்டு வருவதாக” வட கொரிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!
“அமெரிக்காவின் நீட்டிக்கப்பட்ட தடை மற்றும் கொரிய தீபகற்பத்தை சுற்றி நேச நாட்டுப் படைகளின் அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகள் முட்டாள்தனமான செயல்கள்” என்று வட கொரிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததாக, வடகொரிய செய்தி நிறுவனமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை நடத்தியது, இது தோல்வியடைந்ததாக சியோல் கூறியது.
1953 இல் கொரியப் போர் முடிவடைந்த பின்னர் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையே உள்ள, நடைமுறை கடல் எல்லையைத் தாண்டி, தென் கொரியாவின் கடல் பகுதிக்கு அருகில் வந்த குறுகிய தூர ஏவுகணையையும் பியோங்யாங் ஏவியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததே இல்லை: வடகொரியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ