சுரண்டை பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்..!

தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

பேருந்து நிலையத்தில் மாணவர்கள் சிலர் அங்கிருந்த மாணவியிடம் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருதரப்பை சார்ந்த மாணவர்கள்  மற்றொரு பிரிவு மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பு மாணவர்களும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டதால் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.