சேலம் : சேலத்தில் நவம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நடக்கும் புத்தக காட்சியை ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக காட்சியை காண வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச போக்குவரத்திற்கு ஏற்படு செய்யப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாநகராட்சி திடலில் நடைபெறும் புத்தக காட்சியில் 210 அரங்குகளில் ஒரு லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. 11 நாட்கள் நடைபெறவுள்ள சேலம் புத்தக காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்க உள்ளார்.