தமிழகத்தில் இதுவரை சுமார் 67.23 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையில் பதிவு செய்துள்ள தரவுகளை அரசு வேலை வாய்ப்பகம் வெளியிட்டுள்ளது.
அந்த தரவுகளின் படி, தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பிற்காக இதுவரை 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்தவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்களும், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்களும், 268 பேர் மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.
பதிவு செய்தவர்களில் வயது வாரியாக, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18.48 லட்சம் பேரும், 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 28.09 லட்சம் பேரும், 31 முதல் 45 வயதுடையவர்கள் 18.30 லட்சம் பேரும், 46 வயது முதல் 60 வயது உடையவர்கள் 2.30 லட்சம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 5,602 பேரும் பதிவு செய்துள்ளனர் என்று அந்த தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில், அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.