வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் உருவாகியுள்ளதால், வரும் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால், வரும் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 20ஆம் வரும் 20ஆம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in