இந்த காலகட்டத்தில் பொதுவாக மக்கள் எந்த வழியில் சம்பாதிக்கலாம் என்று நினைக்கின்றனர். அதற்காக பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இப்போதெல்லாம் கீழே ஏதாவது பணமோ, நகையோ அல்லது வேறு ஏதாவது பொருளோ கிடந்தால் அதனை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லும் இந்த உலகத்தில் இந்த நபர் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் நிகழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவர் ஒரு விவசாயி. இவர் அந்த பகுதியிலுள்ள கனரா வங்கி ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, ஏ.டி.எம்., சென்டரில் வெறும் 500 ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரம் ரூபாய் கிடந்துள்ளது. அதனை பார்த்த அவர் அந்த பணத்தை திருமுருகன் பூண்டி போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டியுள்ளனர், மேலும், பணம் யாருடையது என்று விசாரணையும் செய்து வருகின்றனர்.