இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2022 நவம்பர் 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியகுறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 19 ஆம், மற்றும்20 ஆம் திகதிகளில் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். |
மழை நிலைமை: |
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்சி ல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. |
காற்று : |
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுவடக்குதிசையிலிருந்துஅல்லது மாறுபட்ட திசைகளிலிருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
கடல் நிலை: |
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன்காணப்படும். |