சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று விடுமுறை கிடையாது எனவும், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது அன்று வேலை நாள் என்று என்று அறிவிகப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பு ஏனென்றால், தீபாவளி பண்டிகை நாளான அக்டோபர் 24 ஆம் தேதி விடுமுறையுடன் சேர்ந்து, அடுத்த நாள், அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு நவம்பர் 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#NewsUpdate | சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்https://t.co/40NriBrKty | #TNGovt | #School | #College | #Working | #ZeeTamilNews
Android Link: https://t.co/9DM6X6ZLY6
Apple Link: https://t.co/3ESH9sHwd3 pic.twitter.com/wAqtzoSL2Z— Zee Tamil News (@ZeeTamilNews) November 17, 2022
மறுபுறம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் வலுப்பெறக்கூடும் என்பதால், தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வுகள் நவம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு என அறிவிப்பு.