கோவையில் உள்ள துணை மின் நிலையங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாடாபாத் துணை மின் நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் நாளைய தினம் (நவம்பர் 18, வெள்ளிக்கிழமை) மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதாவது, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
* மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயண குரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி,
* வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம்,
* திவான் பஹதூா் சாலை (ஒரு பகுதி), பூ மாா்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகா், செல்லப்ப கவுண்டா் சாலை,
* சி.எஸ்.டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடா் சாலை, சுக்கிரவாா்பேட்டை, மரக்கடை , தெப்பக்குள மைதானம்,
* ராம்நகா், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூா், பாலசுந்தரம் சாலை,
* புதியவா் நகா் (ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்ப செட்டியாா் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, அட்கோ காலனி
ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.