பெஷாவர் : பாகிஸ்தானில், போலீஸ்காரர்கள் சென்ற வேன் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மர்வாத் மாவட்டத்தில், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஐந்து போலீஸ் கான்ஸ்டபிள்கள் வேனில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், வேனை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், போலீசார் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப், தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை தலைவரிடம் உடனடியாக அறிக்கை கேட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement