மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் வேகமாகச் சென்ற ஆட்டோவிலிருந்து 17 வயது சிறுமி கீழே விழுந்தார். உடனே சாலையில் சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து காவல்துறையிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதையடுத்து காயமடைந்த அந்தச் சிறுமியை போலீஸார் விசாரித்தபோது, “நான் டியூஷன் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப ஆட்டோவில் ஏறினேன். அப்போது ஓட்டுநர் என்னிடம் பேசத் தொடங்கினார். ஆரம்பத்தில் சாதாரண கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டு வந்தார்.
ஆனால், அதன்பிறகு பாலியல்ரீதியாக தொடத் தொடங்கினார். அவரின் பாலியல் தொல்லையிலிருந்து தப்பிக்க நான் ஆட்டோவிலிருந்து குதித்துவிட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவம் நடந்த சாலையிலுள்ள 40 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, ஆட்டோ ஓட்டுநர் சையத் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். சிறுமி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.