ராஜ குடும்ப உறுப்பினர்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
அத்துடன், சில ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு ஒன்றல்ல, பல பட்டங்கள் உள்ளன.
மன்னர் சார்லசின் முழுப்பெயர்
அவ்வகையில், பட்டங்களுடன் மன்னர் சார்லசின் முழுப்பெயரைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆம், மன்னர் சார்லசின் முழுப்பெயர், Charles III, by the Grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland and of his other realms and territories King, Head of the Commonwealth, Defender of the Faith என்பதாகும்.
image – POOL
இளவரசர் வில்லியமுக்கும் சில பட்டங்கள்
மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து இளவரசர் வில்லியம் தன் தந்தையின் சில பட்டங்களைப் பெற்றுள்ளார். அவற்றில் ஒன்று வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம். அதுபோக, வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டுக்கு, The Earl and Countess of Strathearn மற்றும் The Baron and Lady Carrickfergus என்னும் பட்டங்களும் உள்ளன.
இந்த பட்டங்களில் சில, நாளை குட்டி இளவரசர் ஜார்ஜுக்கும் வழங்கப்படலாம்.
Image: John Stillwell – WPA Pool/Getty Images