மதுரை: பிள்ளையார்பட்டி அறங்காவலர் சொக்கலிங்கம் தகுதி நீக்கத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. சொக்கலிங்கத்தை தகுதி நீக்கம் செய்து அறநிலையத்துறை இணை ஆணையர் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் அறங்காவலர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டேன் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.