ஹெச்.வினோத், அஜித் கூட்டணியில் வெளியான முதல் இரண்டு படங்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் சதுரங்க வேட்டை, தீரன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வினோத்துக்கு என்னாச்சு என பலர் முணுமுணுக்க தொடங்கினார்கள். அதேசமயம் வலிமை படத்தில் பலரின் தலையீடு இருந்ததால் தான் நினைத்தபடி வினோத்தால் வலிமை படத்தை எடுக்க முடியவில்லை என கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. ஆனால் துணிவு படம் முழுக்க முழுக்க வினோத்தின் படமாகவே உருவாகியிருப்பதாகவும், வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. க்ரைம் ஏரியாவில் வினோத் கில்லி என்பதால் துணிவு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்கின்றனர் ஏகே ரசிகர்கள்.
துணிவு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷனுக்கோ, படத்துக்கு தியேட்டர் கிடைப்பதிலோ எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது.வாரிசும் பொங்கலுக்கு வெளிவருவதால் இந்தப் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கிறது.
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022
இந்நிலையில், அஜித் தனது ரசிகர்கள்க்கு அட்வைஸ் செய்திருக்கிறார். அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், “வெறுப்புணர்வோ, பொறாமையோ வேண்டாம். எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, உயர்ந்த இலக்குடன் செயல்பட வேண்டும்”
முன்னதாக, அஜித் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அந்தப் பதிவில் ஒரு நாள் ராப் சாங் படப்பிடிப்பின் போது நாங்க ஒரு நாலு பேரு ஓராம நின்னுட்டு இருந்தோம்.எங்கள் பாத்து ’ஏன் நின்னுட்டு இருக்கீங்க’ வேலை பாத்து டயர்டா இருப்பீங்கன்னு உட்காருங்கன்னு சொன்னாரு. அதுக்கு ஏன் பக்கத்துல இருந்த பையன் பரவால சார்-னு சொன்னதுக்கு தல என்னா தெரியுமா சொன்னாரு ‘சார்-னு சொல்லாதடா அண்ணான்னு சொல்லுன்னு சொன்னாங்க” என குறிப்பிட்டிருந்தார்.