மோட்டார் வாகன பதிவுக்கட்டணம் நாளை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ,போக்குவரத்து ,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
மோட்டார் வாகனத்திற்கான வழமையான பதிவுக் கட்டணம் இரண்டாயிரம் ரூபாவாகும். முன்னுரிமை அடிப்படையிலான பதிவுக்கட்டணம் மூவாயிரம் ரூபாவாகும். ஒரு நாள் பதிவுக் கட்டணமாக நான்காயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது.
மோட்டார் வாகனத்திற்காக நாளாந்தம் தாமதக் கட்டணம் 100 ரூபாவாகும். மோட்டார் சைக்கிளுக்கான நாளாந்தக் கட்டணம் 50 ரூபாவாகும். மோட்டார் வாகன சான்றிதழ் விபரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மூவாயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பு (ஆங்கிலம்)