ஷ்ரத்தா கொலை வழக்கு: கல்லீரலையும் குடலையும் கைமா போட்ட கொலைகாரன்!

ஷ்ரத்தா கொலை வழக்கு: தில்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலை விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. காவல் துறை விசாரணையில், ஷ்ரத்தாவை கொன்ற அஃப்தாப் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் மிகவும் அதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளன. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தபப்ட வேண்டும் என காவல் துறை விண்ணப்பித்துள்ளது. மறுபுறம், ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வாக்கர் கூறுகையில், எனக்கு நீதி கிடைக்கும் என்று உணர்கிறேன். கொலையாளி தூக்கிலிடப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தார். மிகவும் தந்திரமாக செயல்பட்ட அஃப்தாப், கடந்த 5-6 மாதங்களில் பல ஆதாரங்களை அழித்துவிட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் கொலையாளி அஃப்தாப் பல டேட்டிங் தளங்களில் ஆக்டிவாக இருந்ததாகவும், 20 முதல் 25 தோழிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

கொலை செய்த பிறகு அப்தாப், ஷ்ரத்தாவின் உடலை பாத்ரூமில் வைத்து விட்டு, அன்றைய இரவை கழித்த பின், திட்டமிட்டு ஒரு பெரிய பிரிட்ஜையும், இறைச்சியை வெட்டும் இரும்பு கத்தியையும் வாங்கியுள்ளார். பின்னர் ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அதனை தனித்தனியாக கருப்பு பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைத்துள்ளார். மேலும் கொலைக்குப் பிறகு, அஃப்தாப், ஷ்ரத்தாவின் கல்லீரல் மற்றும் குடலை கைமா செய்து அழித்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் ஒரு பயிற்சி பெற்ற சமையல்காரர் என்பதால், அவருக்கு இறைச்சியை துண்டு துண்டாக வெட்ட கத்தியை எப்படி பயன்படுத்துவது என்பது தெரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கொலைக்குப் பிறகு, அப்தாப் இரத்தக் கறைகளை சுத்தம் செய்ய நிறைய தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அஃப்தாப்-ஷ்ரத்தா இருந்த குடியிருப்புக்கு ரூ.300 தண்ணீர் கட்டணம் பாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. டெல்லியில் 20,000 லிட்டர் தண்ணீரை அரசு இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவையும் மீறி அவர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளார். அஃப்தாப் அடிக்கடி கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியின் தண்ணீர் உள்ளதா என்பதை சரிபார்க்க செல்வதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும், வாடகை ஒப்பந்தத்தில் ஷ்ரத்தாவின் பெயரை முதலிலும், கடைசியாக தனது பெயரை அஃப்தாப் எழுதியுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பது அந்த குடியிருப்பின் உரிமையாளருக்கு தெரியும். புரோக்கர் மூலம் அவருக்கு பிளாட் கொடுக்கப்பட்டது. அஃப்தாப் ஒவ்வொரு மாதமும் 8 முதல் 10ம் தேதி வரை உரிமையாளரின் கணக்கில் ரூ.9,000 டெபாசிட் செய்து வந்திருக்கிறார்.

மேலும் மே 18-ம் தேதி நடந்த சண்டை முதல் முறையல்ல, அஃப்தாப்பும் ஷ்ரத்தாவும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. “மே 18ஆம் தேதி, மும்பையில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு வருவது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. வீட்டுச் செலவுகளை யார் ஏற்பது, பொருட்களைக் கொண்டு வருவது என்று சண்டை போடுவது வழக்கம். இந்த விஷயத்தில் அஃப்தாப் மிகவும் கோபமடைந்துள்ளார்” என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஷ்ரத்தாவின் நெட் பேங்கிங் அக்கவுண்ட் செயலியில் இருந்து அஃப்தாபின் கணக்கிற்கு மே 26 அன்று ரூ.54,000 பரிவர்த்தனை செய்யப்பட்டதாகக் காட்டிய, வங்கிக் கணக்கு விபரம் காவல்துறைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததுள்ளது.

கொலைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு (மே 18) ஷ்ரத்தாவைக் கொல்ல முடிவு செய்ததாக அஃப்தாப் ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் ஏஎன்ஐயிடம் தெரிவித்தன. அஃப்தாப் தனது வாக்குமூலத்தில், ஷ்ரத்தாவுக்கு தன் மீது சந்தேகம் இருந்ததாகவும், அதனால், அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் பூனாவாலாவை டெல்லி போலீஸார் இன்று சாகேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை மேலும் காவலில் வைக்கக் கோரிக்கை வைக்க உள்ளனர். அனைத்து ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.