இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Bharti Airtel நிறுவனம் அதன் இரு ரீசார்ஜ் திட்டங்களில் மட்டுமே வழங்குகிறது.
ஏற்கனவே இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Jio நிறுவனம் அதன் அனைத்து Disney+Hotstar திட்டங்களையும் நீக்கியது. தற்போது
Airtel நிறுவனமும்
இரு திட்டங்களை மட்டுமே வழங்கி மீதம் உள்ள அனைத்து Disney+Hotstar திட்டங்களையும் நீக்கியுள்ளது.
Airtel Disney+Hotstar திட்டங்கள்
தற்போது இரண்டு திட்டங்களில் மட்டுமே இந்த Disney+Hotstar கிடைக்கிறது. ஒரு 499 ரூபாய் மற்றும் 3359 ரூபாய் திட்டம். இந்த 499 ரூபாய் திட்டம் மூலமாக உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதி, 100SMS ஒரு நாளைக்கு, 28 நாட்களுக்கு 2GB டேட்டா வசதி.
இதன் 3359 ரூபாய் திட்டம் மூலமாக நமக்கு 365 நாட்கள் அன்லிமிடெட் டேட்டா வசதி, 2.5GB டேட்டா வசதி, 100 SMS/ஒரு நாளைக்கு கிடைக்கிறது. இந்த இரு திட்டங்களிலும் Disney+Hotstar சந்தா உள்ளது. இதன் 3359 ரூபாய் திட்டத்தில் கூடுதலாக இலவசமாக
Amazon Prime Video Mobile Edition
Subscription வசதி கூடுதலாக கிடைக்கிறது. இதோடு
Airtel Thanks திட்டங்களும்
கிடைக்கிறது.
Disney+Hotstar நீக்கப்பட்ட திட்டங்கள்
இதுவரை வழங்கப்பட்ட 181 ரூபாய், 399 ரூபாய், 599 ரூபாய், 839 ரூபாய், 2999 ரூபாய் ஆகிய திட்டங்களில் இருந்து இந்த Disney+Hotstar நீக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இதில் மற்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
181 ரூபாய் திட்டம் ஒரு 4G டேட்டா வவுச்சர் ஆகும். இதில் 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1GB டேட்டா கிடைக்கிறது. இது ஏற்கனவே இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் வேலை செய்யும்.399 ரூபாய் திட்டத்தில் 2.5GB தினசரி டேட்டா, 100 SMS ஒரு நாளைக்கு, அன்லிமிடெட் காலிங் வசதி, Airtel Thanks வசதி போன்றவை 28 நாட்களுக்கு கிடைக்கிறது.599 ரூபாய் திட்டத்தில் 3GB தினசரி டேட்டா, 100 SMS ஒரு நாளைக்கு, அன்லிமிடெட் காலிங், Airtel Thanks வசதி போன்றவை 28 நாட்களுக்கு கிடைக்கிறது.839 ரூபாய் திட்டம் ஒரு நாளைக்கு 2GB டேட்டா, 100 SMS ஒரு நாளைக்கு, அன்லிமிடெட் காலிங், Airtel Thanks வசதி போன்றவை 84நாட்களுக்கு கிடைக்கிறது.2999 ரூபாய் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா, 100 SMS ஒரு நாளைக்கு, அன்லிமிடெட் காலிங், Airtel Thanks வசதி போன்றவை 365 நாட்களுக்கு கிடைக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்