நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி(FIFA), கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. கத்தாரில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், பெண் ரசிகர்களுக்கு என்று கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
பொதுவாக எல்லா நாடுகளிலும் போட்டியைக் காண செல்லும் ரசிகர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. அவர் அவர் விருப்பப்படி உடை அணிந்து செல்வர்.
ஆனால், கத்தார் நாட்டில் நடைபெறும் இக்கால்பந்து போட்டியை வெளிநாடுகளிலிருந்து காண வரும் பெண் ரசிகர்கள், நாட்டின் விதிகளை மதிக்கும் படி உடைகளை அணிந்து வர வேண்டும் கவர்ச்சியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதை கடைப்பிடிக்க தவறும் பெண்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் மைதானங்களில் ரசிகர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.