அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாக அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ஒத்துழைப்புக்கான நட்பாக இருநாடுகளின் நட்புறவு முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். வாஷிங்டனில் இந்திய ஹவுஸ் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஜான், குவாட் மாநாடு, இந்தியா தலைமையேற்றுள்ள ஜி 20 கூட்டமைப்பின் மாநாடு போன்ற நிகழ்வுகள் மூலமாக அடுத்த ஆண்டில் பிரதமர் மோடி- அதிபர் ஜோ பைடன் இடையிலான நட்பு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.