இந்தோனேஷிய நாட்டில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, சுமார் 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய நாட்டில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பான் நாட்டிற்கு அடுத்த படியாக இந்தோனேஷிய நாட்டில் தான் அதிக நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மதியம், இந்தோனேஷிய நாட்டின் ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் குலுங்கின. இதனால் பொது மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 20 பேர் பலியாகி உள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேசம்: காதலியை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசிய நபர்.!
நிலநடுக்கம் குறித்து, சியாஞ்சூர் நிர்வாகத்தின் தலைவர் ஹெர்மன் சுஹர்மன் கூறியதாவது:
தற்போதைக்கு எனக்கு கிடைத்த தகவலின் படி, இந்த மருத்துவமனையில் மட்டும், நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.