இளவரசி டயானாவை போல தான் நானும் என நிரூபிக்கும் வகையில் அவரின் மருமகள் மேகன் மெர்க்கல் யாருக்கும் தெரியாமல் அமைதியாக செய்துள்ள உதவி குறித்த நெகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டயானாவுடன் பல முறை ஒப்பிடப்பட்ட மேகன்
ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் பல முறை தனது மாமியார் இளவரசி டயனாவுடன் ஒப்பிடப்பட்டுள்ளார்.
சில சமயங்களில் அவர்களின் நாகரீக ரசனைக்காகவும், சில சமயங்களில் அரச இயந்திரத்திற்கு கட்டுப்படுவதற்கான அவர்களின் போராட்டத்திற்காகவும், சில சமயங்களில் அவர்களின் பச்சாதாப குணத்திற்காகவும் இருவரும் ஒப்பிடப்பட்டிருக்கின்றனர்.
அந்த வகையில் அமெரிக்க நடிகர், இயக்குனரான டைலர் பெர்ரி 2022 பேபி2பேபி காலா நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட சம்பவம் மூலம் டயானாவுடனான மேகனின் ஒற்றுமையை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளார்.
GETTY IMAGES
களத்தில் இறங்கி மேகன் செய்த உதவி
அதன்படி, டைலரிடம் பணிபுரியும் ஊழியரின் குழந்தைக்கு பேபி பார்முலா உணவு தேவைப்பட்டிருக்கிறது. பேபி பார்முலா என்பது 12 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு பொருளாகும்.
அப்போது அமெரிக்காவில் பேபி பார்முலாவுக்கு கடுமையான தட்டுபாடு ஏற்பட்டதால் எங்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து அறிந்த டைலர் தனது நண்பர்களான மேகன் மெர்க்கல், இளவரசர் ஹரியிடம் உதவி கோரியுள்ளார்.
இதையடுத்து பெர்ரியின் ஊழியர் சார்பாக இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் பார்ப்பதாக மேகன் உறுதியளித்தார்.
அதன்படி லண்டனில் உள்ள கடைகளில் தானே அந்த பொருளை தேடி எடுத்து வாங்கி கொடுத்திருக்கிறார்.
டயானாவை நினைவூட்டுகிறது
மேகனின் இந்த உதவும் குணம் அப்படியே அவரின் மாமியார் இளவரசி டயானாவை நினைவூட்டுகிறது என சொன்னால் அது மிகையாகாது!
ஏனெனில் இளவரசி டயானாவும் தன்னலமற்று மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவராக அறியப்பட்டவர்.
பிரித்தானியாவின் முதல் எய்ட்ஸ் நோய் சிகிச்சை பிரிவை திறந்து வைத்து நோயாளிகளை சந்தித்து கை கொடுத்தது, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுடன் கை குலுக்கியது போன்ற மனிதநேயம் கொண்ட செயல்களை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Shutterstock, Getty Images