நாமக்கல்: உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருவதால் முட்டை தேவை கத்தாரில் அதிகரித்துள்ளது. கத்தாரில் நடக்கவுள்ள கால்பந்து போட்டியை காண ஏராளமான கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்துவரும் நிலையில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து விளையாடும் வீரர்களுக்கு முட்டை வழங்க 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றில் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பக்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்படி மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு மாதத்திற்கு 2 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. கத்தாருக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உலகம் முழுவதும் போட்டியைக் காண பல லட்சக் கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. அதன்படி மாதந்தோறும் கத்தார் நாட்டுக்கும் மட்டும் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தற்போது மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.