'உலகம் முழுவதும் ஆபத்தில் உள்ளது' ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது மீண்டும் ஷெல் தாக்குதல்


ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது மீண்டும் எறிகணை வீசி தாக்குதல் நடத்தியதால் ‘உலகம் முழுவதும் ஆபத்தில் உள்ளது’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவசர நடவடிக்கை வேண்டும்

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான Zaporizhzhia மீது கடந்த வார இறுதியில் மீண்டும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதால், அந்த இடத்தில் “அணு விபத்து” ஏற்படுவதைத் தவிர்க்க அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia-வில் சனிக்கிழமை காலை (நவம்பர் 19) மீண்டும் மீண்டும் குண்டுவெடிப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ரஷ்யாவின் ஒப்பந்த அமைதியின் காலம் முடிவுக்கு வருவதைக் குறிக்கிறது.

GettyImages

நெருப்புடன் விளையாடுகிறார்கள்

இந்நிலையில், Zaporizhzhia அணுமின் நிலையத்தில் சமீபத்திய தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency) எச்சரித்துள்ளது.

ஆனால், இப்போதைக்கு இந்த தாக்குதலில் அணுசக்தி பாதுகாப்பிற்கு முக்கியமானதாக கருதப்படும் பகுதிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதையும் சர்வதேச அணுசக்தி முகமை உறுதிப்படுத்தியது.

ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு

இதனிடையே, ரஷ்யாவும் உக்ரைனும் இந்த தாக்குதலில் அணுமின் நிலையத்தை குறிவைத்ததாக ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டுகின்றன.

ஆனால், மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைன் தனது சொந்த மண்ணில் அணுசக்தி பேரழிவை உருவாக்க விரும்பாது என நம்புகின்றன.

Zaporizhzhia அணுமின் நிலையத்தின் பிரதேசத்தில் குறைந்தது 12 ஷெல் தாக்குதல் பதிவு செய்யப்பட்டன. இதனால் ரஷ்யா மீண்டும் ஒருமுறை… முழு உலகையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று சர்வதேச அணுசக்தி முகமை குற்றம் சாட்டியது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.