எரிபொருளுக்கான QR பாவனை தொடர்பில் அமைச்சு வெளியிட்ட தகவல்


எரிபொருளுக்கான QR நடைமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அடுத்த மாதம் முதல் QR நடைமுறை நீக்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. எனினம் அது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என அமைச்சர தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கான QR பாவனை தொடர்பில் அமைச்சு வெளியிட்ட தகவல் | Sri Lanka Fuel Qr Code System

நாட்டில் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வரை QR முறை தொடரும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு டொலர் கையிருப்பு இல்லாததால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து QR நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின் கீழ் தனிநபர்கள் வாரத்தில் கிடைக்கும் எரிபொருள் விலையை முழுவதுமாகப் பெறலாம் அல்லது வாரத்தின் போது படிப்படியாக ஒதுக்கீட்டைப் பெறலாம்.

தற்போது அனைத்து நிரப்பு நிலையங்களும் QR குறியீட்டு முறையின் கீழ் மாத்திரமே எரிபொருளை விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.