ஏழை மாணவியை டாக்டராக்கும் ரோஜா

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரோஜா இன்று ஆந்திர அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர்கள் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு இன்னொரு முகம் உண்டு அது சமூக சேவகி.

தனது தொகுதியான நகரியை சேர்ந்த புஷ்பா என்கிற ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்தார் ரோஜா. அவரது கல்வி செலவு உள்ளிட்ட அனைத்தையும் அவரே கவனித்துக் கொண்டார். அந்த சிறுமிக்கான கல்வியை, வாழ்நாள் முழுவதுற்குமான படிப்பு செலவை தான் ஏற்பதாக அறிவித்தார். புஷ்பா தற்போது நடை பெற்ற நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதால், திருப்பதி பத்மாவதி மகளிர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் டாக்ராகி விடுவார் புஷ்பா.

“மருத்துவ வசதி இல்லாமல் என் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக செய்வதே என் லட்சியம்” என்கிறார் புஷ்பா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.