கொல்கத்தா வந்த உலகின் பிரம்மாண்ட திமிங்கல வடிவ விமானம்! வாய் பிளந்த பயணிகள்!

கொல்கத்தா விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான திமிங்கல வடிவிலான ஏர்பஸ் பெலுகாவைப் பார்த்த விமானப் பயணிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பிரம்மாண்டமான வடிவ அமைப்பினால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உலகில் பல்வேறு வகையான விமானங்கள் உள்ளன. ஆனால் சமீபத்தில் ஒரு விமானம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கிய விமானம் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான திமிங்கல வடிவிலான ஏர்பஸ் பெலுகா, நவம்பர் 20 அன்று, கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்குவதைக் காண மக்கள் ஏராளமானோர் கூடினர்.

பிரம்மாண்டமான ஏர்பஸ் பெலுகா ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம் அதன் பிரம்மாண்டமான அமைப்பு மற்றும் வடிவம் காரணமாக விமானப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் மதியம் 12:30 மணியளவில் திமிங்கலம் போன்ற விமானம் தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமிங்கல வடிவிலான ஏர்பஸ் பெலுகா அதன் தனிப்பட்ட வடிவம் காரணமாக, மக்களின் கண்களுக்கு விருந்தாகும் ஒரு கண்காட்சியாக மாறியது. திமிங்கல வடிவிலான விமானம், அதிக அளவு சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படுகிறது. எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக நள்ளிரவு 12.30 மணியளவில் அகமதாபாத்தில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகின் பிற பகுதிக்கு அரிதாக வருகை தரும் விமானம், தாய்லாந்துக்கு இரவு 9 மணிக்கு நகரத்திலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். கொல்கத்தா விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றின் படங்களுடன் இணையவாசிகளிடையே செய்தியைப் பகிர்ந்து கொள்ள ட்விட்டரில் அதன் படங்களை பகிர்ந்து கொண்டது.

 

“யார் வந்திருக்கிறார்கள் என்று யூகிக்கவும்! திமிங்கலம்! உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் பெலுகா (எண். 3). பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கவும் மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது. கொல்கத்தா நகரில் வீற்றிருக்கும் கம்பீரமான விமானத்தில் சில காட்சிகள் இங்கே காணலாம்” என கொல்கத்தா விமான நிலையத்தின் ட்வீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.