சண்டைக்கு பின் சமாதானம்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை மீண்டும் திறக்கப்பட்டது

வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்காக மூடப்பட்ட ஆப்கானிஸ்தானுடனான எல்லைக் பகுதியை இன்று (நவம்பர் 2, திங்கள்கிழமை ) பாகிஸ்தான் மீண்டும் திறந்தது. கடந்த வாரத்தில், இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்த எல்லைப் பகுதி மூடப்பட்டது. இதைத் தவிர மற்றுமொரு மோதலில், மூன்று பேர் காயமடைந்தனர். இந்த எல்லைப் பாதையானது, பாகிஸ்தானின் சாஹ்மான் நகரத்திற்கும் ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்திற்கும் இடையே அமைந்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான் அதிகாரிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த தென்மேற்கு எல்லைப்பாதை மீண்டும் திறக்கப்பட்டதாக சஹ்மானின் துணை ஆணையர் அப்துல் ஹமீத் செஹ்ரி தெரிவித்தார். 

மேலும் படிக்க | FIFA World Cup 2022: பிரபல கால்பந்தாட்ட வீரர்களின் காதல் துணைகள்

இரு நாடுகளின் எல்லைகளிலும் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான மக்களும் நூற்றுக்கணக்கான லாரிகளும் இன்று எல்லையை கடந்ததால், அந்தப் பகுதியில் நிலவி வந்த நெரிசலும் பதற்றமும் குறைந்தது.

வடமேற்கு பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தில் கடந்த வாரம் திங்களன்று தொடங்கிய வெவ்வேறு மோதல்கள், சிக்கல்களுக்கு தொடாக்கப்புள்ளியாக இருந்ததாக பாக்டியா மாகாணத்தின் எல்லையில் உள்ள போலீஸ் செய்தித் தொடர்பாளர் முனிப் சத்ரன் கூறினார்.

துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் இந்து சமூகத்தினரின் நிலை என்ன? இந்துக்களின் கலாச்சாரமும் உரிமைகளும்

இந்த செய்தி தொடர்பாக, பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. ஆனால்  ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய ஒரு பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் வழக்கமான எல்லை நிர்வாக ஒருங்கிணைப்பு இருப்பதாகக் கூறினார்.

கடந்த வார மோதல்கள் குறித்த விசாரணைகளின் விவரங்களை ஆப்கானிஸ்தான், சரியான நேரத்தில் பாகிஸ்தானுடன் பகிர்ந்துக் கொள்ளும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். .

இரு நாடுகளுக்கும் இடையிலான நூற்றுக்கணக்கான மைல் எல்லைப் பகுதிகளில்,சர்ச்சைக்குரிய வகையில் தொடர்வது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை என்பது பல தசாப்தங்களாக தொடர்கிறது. 

மேலும் படிக்க | இம்ரான் கானைக் கொல்ல 2 மாதங்களுக்கு முன்பே சதித்திட்டம் தீட்டப்பட்டதா? பகீர் புகார்

மேலும் படிக்க: கொடூர கொலையை நினைவுபடுத்திய டெல்லி சம்பவம்! மனைவியை 72 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.