சரியும் ஓ.பன்னீர்செல்வம் கோட்டை – தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி!

அணியில் இருந்த நிர்வாகிகள், அணியில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

அதிமுகவில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்

தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த

மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த

, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். எனினும் இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், டெல்லி பாஜக மேலிடமும் மவுனம் காத்து வருகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி ஆகியோரை, பாஜக மேலிடத் தலைவர்கள் சமமாக பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று, சேலம் மாவட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த நிர்வாகிகள் பலர், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளனர். மாநில அம்மா பேரவை துணை செயலாளர் மயிலை டி.மாறன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான பொதிகை கே.பி.சாரதி, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஈ.உத்திரகுமார், திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் டி.ராஜா ஆகியோர், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிர்வாகிகள் கூறியதாவது:

சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான சசிகலா இணைப்பை நாங்கள் விரும்பவில்லை. அதனால் அங்கிருந்து விலகி தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். அவரது தலைமையின் கீழ் செயல்பட்டு அதிமுக ஆட்சி மலர கடுமையாக உழைப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.