சென்னையில் இருந்து 450 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகரக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பெரம்பலூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் இன்றும் நாளையும் 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீன்பிடிக்க  செல்ல வேண்டாமென்று மீனவர்களை வானிலை ஆய்வு மையம் கேட்டு கொண்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.