பரந்தூர் விமான நிலையம் : 117 -வது நாளாக கிராம மக்கள் போராட்டம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி உள்ளிட்ட கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்படவுள்ளது. 

இந்த விமான நிலையத்தால், தங்களின் இருப்பிடமும், எங்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் என்றுக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த விமான நிலையத்திற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட பன்னிரண்டு கிராமங்களில் இருந்து விளை நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்டவைகளை கையகப்படுத்தப்படுவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இன்று 117வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இரவு நேரத்தில் கடும் குளிரில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா? என்றும், விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.