பழம்பெரும் திரைப்பட வசனகர்தா ஆரூர்தாஸ் மறைவிற்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று மாலை தியாகராய நகரில் அவரது இல்லத்தில் முதுமையின் காரணமாக காலமானார். இந்நிலையில் அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார.
தியாகராய நகரில் வசித்து வந்த ஆரூர் தாஸ் முதுமை காரணமாக கடந்த சில வருடம்களாகவே நடமாட்டம் இன்றி ஓய்வு பெற்று வந்தார், இந்நிலையில் நேற்று மாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
image
91 வயதான ஆரூர் தாஸ், 1958ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரித்த வாழவைத்த தெய்வம் படத்திற்கு கதை வசனம் எழுதத் தொடங்கியவர், 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை-வசனம் எழுதியுள்ளார். கடைசியாக வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூரை சேர்ந்த ஆரூர்தாஸ் தனித்துவமிக்க வசன ஆற்றலால் தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்தார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் வரை என பல முக்கிய பிரபலங்களிடம் நட்பு பாராட்டி வந்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் ஆரூர் தாஸ். சத்யபாமா பல்கலைக்கழகம் இவரது திரை சேவையை பாராட்டி 2014 ஆம் ஆண்டு  கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது. ஆரூர் தாசுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.
image
சிவாஜிகணேசன் நடித்தவற்றில் பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன், விஸ்வரூபம், தியாகி, விடுதலை, குடும்பம் ஒரு கோவில், பந்தம், அன்புள்ள அப்பா.
எம்.ஜி.ஆர். நடித்த தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா?. ஜெமினிகணேசன் நடித்த வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, திருமகள், பெண் என்றால் பெண் போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்.
image
ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தி.நகரில் உள்ள ஆருர் தாஸின் இல்லத்திற்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினார். அவரோடு அமைச்சர் ஏவா வேலு, ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
image
ஆரூர் தாசின் உடலுக்கு வைரமுத்து, சிவக்குமார், பாக்யராஜ், மனோபாலா உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
image
ஆரூர் தாஸின் உடல், மந்தைவெளி கல்லறை தோட்டத்தில் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.