முதல் போட்டியில் வெற்றிபெற எதிரணி வீரர்களுக்கு லஞ்சம் கொடுக்க கத்தார் முயற்சியா…!

புதுடெல்லி

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது.

மேலும், மதுபானத்துக்கு தடை= மனிதஉரிமை விவகாரம், தீவிர ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றால் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை தொடரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மற்றொரு மிகப்பெரிய குற்றச்சாட்டில் கத்தார் சிக்கியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள பிரிட்டிஷ் மையத்தின் பிராந்திய இயக்குநருமான அம்ஜத் தாஹா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது பதிவில், “கத்தார் நாடு தங்களுக்கு எதிரான போட்டியில் தோற்கவேண்டும் என்று எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு 7.4 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முன் வந்து உள்ளது. ஐந்து கத்தார் நாட்டினரும் மற்றும் ஈக்வடார் நாட்டினரும் இதை உறுதிப்படுத்தினர். இது தவறான தகவல் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதை பகிர்வது முடிவை பாதிக்கும் என நம்பினாலும் பிபா ஊழலை எதிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடக்க நாளான நேற்று ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதின. இதில் ஈகுவடார் அணி வெற்றி பெற்றது


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.