யூரியா பொதிகளை வழங்கும் போது அவற்றின் எடையை பரிசோதித்து வழங்க அமைச்சர் பணிப்பு

விவசாய சேவை மத்திய நிலையங்களில் இருந்து ,விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்கும் போது உர பொதிகளின் எடையை பரிசோதித்து விநியோகிக்குமாறு, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பெமடுவ விவசாய சேவை மத்திய நிலையத்தில் பதிவான சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த முறையினால் விவசாயிகள், விவசாய சேவை நிலையங்களில் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் உர விநியோகத் திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதால் இதனை முறையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.