90s kids-களின் ஃபேவரைட் க்ரீன் ரேஞ்சர் ‘ஃபிராங்க்’ காலமானார்.. தற்கொலை காரணமா?

90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்று பவர் ரேஞ்சர்ஸ். அதில் புகழ்பெற்ற க்ரீன் ரேஞ்சராக நடித்திருந்த ஜேசன் டேவிட் ஃபிராங்க் (49) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேசன் டேவிட் ஃபிராங்கின் மறைவு செய்தியை மேனேஜரான ஜஸ்டின் ஹன்ட் அறிவித்திருந்தார். ஃபிராங்கின் மரணம் தற்கொலை என்ற தகவல்கள் பரவி வந்தாலும் அதிகாரப்பூர்வமாக அது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மறைந்த ஃபிராங்கிற்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற தற்காப்பு கலைகளை கைத்தேர்ந்தவராக இருந்த ஜேசன் டேவிட் ஃபிராங்க் பவர் ரேஞ்சர் சீரிஸ் மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by WalterEJones (@walterejones)

1993 முதல் 1996ம் ஆண்டு வரை Mighty Morphin Power Rangers-ல் ஃபிராங்க் க்ரீன் ரேஞ்சராக டாமி ஆலிவர் கதாப்பாத்திரத்தில் சுமார் 124 எபிசோடுகளில் நடித்திருந்தார். ஒயிட் ரேஞ்சராகவும் வந்த ஜேசன் டேவிட் ஃபிராங், zeo, turbo, wild force, dino thunder உள்ளிட்ட பலவற்றிலும் பவர் ரேஞ்சராக வருவார்.

ஃபிராங்கின் மறைவிற்கு, அசல் பிளாக் ரேஞ்சராக வந்த வால்டர் இம்மானுவேல் ஜோன்ஸ், “இதை நம்பவே முடியவில்லை. பவர் ரேஞ்சர் குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரை இழந்தது மிகவும் வருத்தம் கொள்ள வைக்கிறது” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். முன்னதாக கடந்த 2001ம் ஆண்டு யெல்லோ ரேஞ்சராக நடித்த துய் ட்ராங் தனது 27வது வயதில் கார் விபத்தில் உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.