இந்தியாவுக்கு எதிரான கடைசி ‛டி-20: நியூசி., பேட்டிங்| Dinamalar

நேப்பியர்: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ‛டி-20′ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதுகிறது. முதல் ‛டி-20′ மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று (நவ.,22) நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் 3வது மற்றும் கடைசி ‛டி-20′ போட்டி நடக்கிறது.

இன்றைய போட்டிக்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால் அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு ‛டாஸ்’ போடப்பட்டது. இதில் டாஸ் நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.