இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம்: ஆஸி., பார்லி ஒப்புதல்| Dinamalar

மெல்போர்ன்: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்திற்கு ஆஸ்திரேலிய பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

கேன்பெர்ரா: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு ஆஸி., பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆஸி., பிரதமர் அந்தோணி அல்பனீசும், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.அதேபோல், பிரிட்டனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஆஸி., பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது. நேற்று ஆஸி., பிரதிநிதிகள் சபையில் எளிதாக நிறைவேறியது. இன்று செனட் சபையில் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது.

எனினும் இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய பார்லிமென்டிலும், பிரிட்டன் பார்லிமென்டிலும் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை.

ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஆஸி., இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆஸி., பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் காரணமாக, நமது வர்த்தக உறவுகளின் முழுத்திறனை வெளிக்கொண்டு வரவும், பொருளாதார வளர்ச்சியை தூண்டவும் இது உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 2ம் தேதி கையெழுத்தானது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.