இந்தியாவை உலுக்கிய கொலை வழக்கில் காதலன் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்


இந்தியாவை உலுக்கிய ஷ்ரதா வாக்கர் கொலை சம்பவத்தில், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பப்பட்ட காதலன், தன் மீதான கொலைக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், தனது காதலியை கொன்று, உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய வழக்கில், கொலைக் குற்றவாளியான அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), அவரது 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவர் சாகேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறப்பு விசாரணையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஃப்தாப் பூனாவாலாவின் பொலிஸ் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையில்.,

இந்தியாவை உலுக்கிய கொலை வழக்கில் காதலன் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள் | Shraddha Walker Body Parts Boyfriend Delhi CourtImage: Instagram @thehungrychokro @thatshortrebel

அஃப்தாப் அமீன் பூனாவாலா தனது காதலி ஷ்ரதா வாக்கரை கொலை செய்ததை நீதிமன்றத்தில் இன்று ஒப்புக்கொண்டார். தற்போது தன்னைப் பற்றி கூறப்படுவது முற்றிலும் உண்மை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அஃப்தாப், காவல்துறைக்கு ஒத்துழைப்பதாகவும், காவல்துறையும் அவரை நன்றாக நடத்துவதக்கவும் கூறினார். அவர் அவர்களை தவறாக வழிநடத்தவில்லை அல்லது அவர்களிடம் பொய் சொல்லவில்லை என்று கூறினார். ஆனால் நீண்ட காலமாக இருப்பதால் பல விடயங்களை நினைவுபடுத்த முடியவில்லை என்று கூறினார்.

ரம்பம், பிளேடு மற்றும் இறைச்சி வெட்டும் கத்தி

விசாரணையின் போது, ​​குருகிராமில் DLF Phase 3 அருகே உள்ள புதர்களில், ஷ்ரதாவின் உடலை வெட்டப் பயன்படுத்திய ரம்பம் மற்றும் பிளேட்டை வீசியதாக ஆப்தாப் கூறினார் என்று பொலிஸார் தெரிவித்தனர். டெல்லி பொலிஸ் குழு அந்த புதர்களை இரண்டு முறை சோதனை செய்து சில ஆதாரங்களை சேகரித்தனர்.

இந்தியாவை உலுக்கிய கொலை வழக்கில் காதலன் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள் | Shraddha Walker Body Parts Boyfriend Delhi CourtANI

மேலும், மெஹ்ராலியில் உள்ள 100 அடி சாலையில் அவர் இறைச்சி வெட்டும் கத்தியை குப்பைத் தொட்டியில் இருந்து மீட்டுள்ளனர். இதுவரை கிடைத்த ஆதாரங்கள் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

டிஎன்ஏ சோதனை

ஷ்ரதாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போகிறதா என சரிபார்க்க, இதுவரை மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடை உட்பட 18 எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஓரிரு வாரங்களில் அறிக்கைகள் கிடைக்கும் என மத்திய தடயவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

சாட்சிகள் இல்லாததால், தடயவியல் அறிக்கைகள், தரவுகள் மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான விசாரணைகள் தான் இந்த வழக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

80 சதவீத விசாரணை முடிந்துவிட்டதாக டெல்லி பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியங்கள் இன்னும் காணாமல் போனதால், அடுத்த சில நாட்கள் நடக்கவிருக்கும் விசாரணைகள் முக்கியமானதாக் யிருக்கும் என கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.