இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை நேற்று உலுக்கிய நிலநடுக்கத்தால், 2 ஆயிரத்து 200 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஏராளமான குழந்தைகள் உள்பட 162 பேரின் உயிரை காவு வாங்கிய இந்த நிலநடுக்கத்தால் 5,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சியாஞ்சூர் மலை நகரில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.