இந்திய தலைநகர் டெல்லியில் மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸாரை போனில் அழைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியின் ஹர்ஷ் விஹாரில் உள்ள காவல் நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
அதில் பேசிய யோகேஷ் குமார் என்ற 35 வயது நபர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாக கூறி பொலிஸாருக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
இதையடுத்து, சம்பவ இடமான சுசீலா கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், அங்கு அவரது மனைவி அர்ச்சனா பேச்சுமூச்சின்றி தரையில் கிடந்ததை பொலிஸார் கண்டனர்.
Photo: Amar Ujala
அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி பொலிஸார் யோகேஷ் குமாரை கைது செய்துனர்.
முதல்கட்ட விசாரணையில், குடும்பம் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அர்ச்சனா பல்வேறு இடங்களில் இருந்து கணிசமான தொகையை கடன் வாங்கியுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் யோகேஷ் அர்ச்சனாவை கழுத்தை நெரித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.