கால்பந்து ரசிகர்களிடையே மோதல்! வீடியோவால் மாட்டிக் கொண்ட ரசிகர்கள்

கொல்லம்: கேரளா மாநிலம் கொல்லத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிகளை ஆதரிக்கும் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் கால்பந்து ரசிகர்கள் சண்டையில் ஈடுபட்ட வீடியோ தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர் என்று கேரள போலீசார் தெரிவித்தனர். சக்திகுளங்கரா கிராமப்புற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது சக்திகுளங்கரா காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 160 (கலவரம் செய்வது) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், அர்ஜென்டினா மற்றும் பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் குழு ஒன்று, சக்திகுளங்கரா கிராமத்தில் சண்டையில் ஈடுபட்டது தெளிவாக தெரிகிறது. கத்தாரில் நடந்த உலகக் கால்பந்துக் கோப்பை தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ரோட்ஷோ நடத்தப்பட்டது, இதில் கால்பந்து ரசிகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அதில், அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகளின் ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சக்திகுளங்கரை பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் இரு குழுக்களும் ஊர்வலமாக சென்றதாகவும், அப்போது இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அந்த வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது. 

வாக்குவாதம் சிறிது நேரத்திலேயே கைகலப்பாக மாறிய நிலையில், அவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் கொடிகளைக் கொண்டு மற்ற குழுக்களைச் சேர்ந்தவர்களைத் தாக்குவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. முதலில் கைகலப்பாகவும், பின்னர் தடிகள் கொண்டும் தாக்குவதையும் அந்த வீடியோ பதிவு தெளிவாக காணிபிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இறுதியில், அங்கிருந்த பெரியவர்கள் தலையிட்டு, கால்பந்து ரசிகர்களின் தகராறைத் தீர்த்து வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அடையாளம் தெரியாதவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அறிக்கை ANI செய்தி சேவையிலிருந்து உருவாக்கப்பட்டது. இதன் உள்ளடக்கத்திற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.