இலங்கை ஒரு புதிய நாடாக மிளிரப் போவதையே 2023 வரவுசெலவுத்திட்டம் கூறுகின்றது. இது ஒரு சமூக முகாமைத்துவத்திற்கான ஒரு சமூக ஒப்பந்தமே இம்முறை வரவுவெலவுத் திட்டம் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் ஆறாவது நாளான (21) நேற்று விவாதத்தில் பங்குபற்றிய அமைச்சர், 2023மார்ச் மாதம் முதல் அரசாங்கத்தின் அதிகமான கொடுப்பனவுகள் டிஜிடல் முறையூடாக மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால் நேரத்தை வீணடிக்காது, மீதப்படுத்தி மிகவும் வினைத்தினான சேவையை மக்களுக்கு வழங்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா உட்பட பல நாடுகளில், கொடுப்பனவு முறை, சமூக பாதுகாப்பு முறை ஆகிய அனைத்தும் பிரஜைகளின் தேவைக்காக டிஜிடல் மயப்படுத்தலைப் பயன்படுத்துவதாகும். அதனால் 2023வரவு செலவுத் திட்டம் இலங்கையை புதிய நாடாக மாற்றும் பயணத்தையே குறிப்பிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத்தை நவீன மயப்படுத்திப் பாதுகாத்தல், இளைஞர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தல் போன்ற காரணங்கள் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் பிரதிபலன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வரி அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் விபரித்தார்.
வறுமை குறித்த மதிப்பீடு 3 வருடங்களாக இடம்பெறவில்லை
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் வறுமை தொடர்பில் கண்டறிவதற்கு முறையான ஆய்வு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சரியான தரவுகள் இன்றி சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைபடுத்துவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்கட்சி தலைவர் கேள்விக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதிலளித்தார்.