ரியாத்:சவுதி அரேபியாவில், கடந்த, 10 நாட்களில் மட்டும் 12 பேருக்கு வாளால் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில், . கொலை, பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தது என, குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியது, கடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 12 பேருக்கு, கடந்த, 10 நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. வாளால் கழுத்து துண்டிக்கப்பட்டு, இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில், மூன்று பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள் , மூன்று பேர் பாகிஸ்தான் நாட்டவர்கள், இருவர் ஜோர்டானைச் சேர்ந்த இருவர் என 12 பேர் அடங்குவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement