டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் செய்தவர் பலாத்கார வழக்கில் குற்றம் செய்தவர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கெஜ்ரிவால் ஆட்சியில் சுதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவில் சிபிஐ கடந்த 2017ம் ஆண்டு வழக்கு பதிந்தது. அதை தொடர்ந்து சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜெயினை கடந்த மே மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. அண்மையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயினுக்கு நபர் ஒருவர் மசாஜ் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சிறையில் இருந்த போது ஜெயினுக்கு சசொகுசு வசதிகளை செய்து கொடுத்ததாக சிறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே இந்த வீடியோவும் வெளியாகியதால் ஆம் ஆத்மி அதிகார துஷ்பிரயோக செயல்களில் ஈடுபடுவதாகவும், சிறை விதிகளை மீறியுள்ளதாகவும் பாரதிய ஜனதா கடுமையாக விமர்சித்து குற்றம் சாட்டியது. இருப்பினும் இதனை மறுத்து ஆம் ஆத்மி கட்சி ஜெயினுக்கு முது தண்டில் பிரச்சனை இருப்பதால் சிறையில் அவருக்கு பிசியோதரப்பி சிகிச்சை வழங்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.
இந்நிலையில் அவருக்கு மசாஜ் செய்தவர் மருத்துவர் அல்ல என்றும்., அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாத்கார குற்றவாளி எனவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீது போக்சோ சட்டம், ibc section 376, 506 மற்றும் 509 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.