பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகனான சிரஞ்சீவிக்கு கோவாவில் நடைபெற உள்ள 53வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி டுவிட்டரில், “சிரஞ்சீவி காரு குறிப்பிடப்பட வேண்டியவர். அவரது செழுமையான பணி, மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான இயல்பு அவரை தலைமுறை தலைமுறையாக திரைப்பட ஆர்வலர்களுக்கு அவரைப் பிடிக்க வைத்துள்ளது. இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெறுவதற்காக அவருக்கு எனது வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, “உங்களது அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்ளே. மிகுந்த தாழ்மையுடன் மரியாதையுடன் இதை நான் உணர்கிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக சிரஞ்சீவி விளங்கி வருகிறார். தனி கட்சி ஆரம்பித்து பின் அதைக் கலைத்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி ஆகி, மந்திரி ஆகி பின்னர் அரசியலை விட்டு விலகிவிட்டார் சிரஞ்சீவி. வரும் பொங்கலுக்கு அவர் நடித்துள்ள 'வால்டர் வீரய்யா' என்ற படம் வெளிவர உள்ளது.

விருது பெற உள்ள சிரஞ்சீவிக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.