ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் முகாம் பகுதியை சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து கடலில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ராமேஸ்வரம் அருகே கடலில் சந்தேகம் ஏற்படும் வகையில் சென்ற படகை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தடுத்தி நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த படகு அதிவேகமாக சென்றது. அதனைத் துரத்தி சென்ற கடலோர காவல்படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, அந்த படகில் சோதனை நடத்திய போது, எட்டு கோணிப்பைகளில் முந்நூறு கிலோ எடையுள்ள கஞ்சாவும், ஐநூறு கிராம் எடையுள்ள கஞ்சா எண்ணெயும் இருந்தது கண்டு பிடிக்கபட்டது.
இவை அனைத்தையும், பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த நான்கு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1.3 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.