ரோஜ்கர் மேளா எனப்படும் மத்திய அரசின் வேலை வாய்ப்பு விழாவின் ஒருபகுதியாக ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 210 பேருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
ரயில்வே துறை, வங்கித்துறை, தபால்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.