சவுதி அரேபியா மற்றும் அர்ஜென்டினா இடையிலான இன்றைய ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்தார்.
உலகக் கோப்பை சாதனை
கட்டாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 கால்பந்து போட்டியில், இன்று நடந்த ஆட்டத்தில் சவூதி அரேபியாவுக்கான அரேபியாவுக்கு எதிராக பெனால்டி ஷாட் மூலம் அர்ஜென்டினாவின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, போர்த்துகலின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்தார்.
இன்றைய போட்டியில், மெஸ்ஸி அமைதியாகவும் நிதானமாகவும் விளையாடினார். அவர் சவுதி அரேபிய கோல்கீப்பரை தவறான பக்கத்திற்கு திசைதிருப்பி, பந்தை கீழே வலது மூலையில் ஸ்லாட் செய்து அணிக்கான தனது முதல் கோலை அடித்தார்.
TIE
இதன்மூலம், உலகக்கோப்பையில் தனது அணிக்காக 7-வது ஓப்பனிங் கொலை அடித்து, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிக உலகக் கோப்பை ஓப்பனிங் கோல் அடித்த வீரர் என சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார்.
7 கோல்
உலகக் கோப்பையில் இதுவரை ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவரும் தலா 7 கோல்களை அந்தந்த நாடுகளுக்காக அடித்துள்ளனர்.
ANNIE LEIBOVITZ/COURTESY OF LOUIS VUITTON
இதுமட்டுமின்றி, நான்கு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையையும் பெற்றார் மெஸ்ஸி (35).
பிரேசிலின் பீலே, ஜேர்மனியின் உவே சீலர் மற்றும் மிரோஸ்லாவ் க்ளோஸ் மற்றும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்குப் பிறகு நான்கு வெவ்வேறு உலகக் கோப்பைகளில் (2006, 2014, 2018, 2022) கோல் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.