தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தோனேஷியாவில்தான் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்படுவதாக தெரிகிறது.
ஜாவா தீவில்:
இதனை மெய்ப்பிக்கும் விதத்தில் நேற்று மதியம், இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள குடியிருப்புகள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை சில வினாடிகள்குலுங்கின. இதனால் அச்சமும், அதிர்ச்சியும அடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு தங்கள் லீட்டைவிட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களில் இடிபாடுகளில் சிக்கி சுமார் 20 பேர் பலியானதாகவும், 300 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் நேற்று முதல்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இந்த பலி எண்ணிக்கை பலமடங்கு உயர்த்திருப்பதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த வீடுகள், கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து, பொதுமக்களும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
150 ஐ தாண்டிய நிலநடுக்கம்:
இடிந்து விழுந்த கான்கிரீட் மற்றும் வீடுகளின் கூரை ஓடுகளை அகற்ற, அகற்ற சடலங்களாக கிடப்பதை கண்டு மீட்பு படையினர் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளனர். இதுவரை 200 க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் எனுவும் மீட்பு குழுவினர் கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 56 பேர் பலி; 700 பேர் படுகாயம்!
25 முறை அதிர்ந்த பூமி
: நேற்று மதியம் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து சீரான இடைவெளியில் மொத்தம் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பீதியில் உறைந்துள்ள பொதுமக்கள், தங்களது வீடுகளுக்கு திரும்பாமல் வீதிகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தை கையாளும் ஜப்பான்:
பூகோள அமைப்புரீதியாகவே நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. அங்கு அவ்வபோது நிலநடுக்கம் ஏற்படுவதை கருத்தில் கொண்டே அதனால் உயிர்சேதம் ஏற்படாதவண்ணம் மர்ங்கள், டெ்ன்ட்கள் உள்ளிட்டவற்றால் வீடுகள் கட்டப்பட்டிருக்கும்.
நிலநடுக்கம் தொடர்பான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டால் தங்களது உயிரையும், உடைமைகளையும் எப்படி காப்பாற்றி கொள்வது என்பது குறித்து அந்நாட்டு மக்களுக்கு அரசு தொடர் பயிற்சியும் அளித்து வருகிறது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்… சுனாமி பீதியில் நாட்டு மக்கள்!
நிலநடுக்கம் ஜப்பானியர்களுக்கு பழக்கமான ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும்போதும் ரிக்டர் அளவுகோலில் அது எந்த அளவு பதிவாகி என்பதுதான் விஷயம்.
கிட்டதட்ட ஜப்பானை போன்றே நிலநடுக்க அபாயம் உள்ள நாடாக உள்ள இந்தோனேஷியாவிலும், நிலநடுக்கத்தால் உயிரசேதம் ஏற்படாத லண்ணம் வீடுகளும், நிலநடுக்கம் ஏற்படும்போது பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள லேண்டும் என்பது குறித்த பயிற்சியையும் இந்தோனேஷிய அரசு அளித்தால், இனி இதனால் ஏற்படும் உயிர்சேதத்தை தவிர்க்கலாம் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.